MARC காட்சி

Back
000 : nam a22 7a 4500
008 : 200522b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
300 : _ _ |a நடுகல் சிற்பம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

          பலகை கல்லின் மேற்புறம் அலங்கார வளைவு போன்றும், அடிப்பாகம் பீடம் போன்றும் செதுக்கப்பட்டு, நடுவில் புலியைக் குத்தி தானும் பட்ட வீரனும், பாய்ந்து அவனைத் தாக்கவரும் புலியும் காட்டப்பட்டுள்ளனர். பாய்ந்து வரும் புலியை தன்னுடைய நீண்ட ஈட்டியால் தாக்கும் நிலையில் வீரன் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளான். இடையில் குறுவாள் தொங்குகிறது. அரையாடை உடுத்தி, கைகளில் வளை, கால்களில் வீரக்கழல்கள் அணிந்துள்ள இவ்வீரனின் நீள்செவிகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. தலையில் தலைப்பாகை அணி செய்கிறது. அவன் எதிரே பாயும் புலி தன் முன்னங்கால்களைத் தூக்கி வீரனைத் தாக்குகிற காட்சியும், இடது கையால் அப்புலியை தடுத்தவாறு, வலது கை ஈட்டியால் குத்தும் வீரனின் வலிமையும் நேர்த்தியாக சிற்பமாக்கப்பட்டுள்ளது.

520 : _ _ |a

         ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்ட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கோபி கலை மற்றும் கல்லூரியின் எதிரில் அக்கல்லூரியின் தொல்லியல் சேகரிப்புகளாக ஐந்து நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான இந்த நடுகல் வீரன் ஒருவன் புலியைக் குத்தி கொன்று, அப்பூசலில் தானும் இறந்துபட்டமையினால் அவன் நினைவாக எடுப்பிக்கப்பட்ட வீரக்கல்லாகும். இக்கல் புலிக்குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது. இந்நடுகல்லில் கல்வெட்டு மிகவும் சிதைந்துவிட்டது.

653 : _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, தருமபுரி, தர்மபுரி, சதிக்கல், கோபிச்செட்டிப்பாளையம், கோபி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரட்டடிபாளையம், ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |b கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |c கரட்டடிபாளையம் |d ஈரோடு |f கோபிசெட்டிபாளையம்
850 : _ _ |a கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
905 : _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.449344
915 : _ _ |a 77.403847
995 : _ _ |a TVA_SCL_001550
barcode : TVA_SCL_001550
book category : கற்சிற்பங்கள்
cover :
Primary File :

TVA_SCL_001550/TVA_SCL_001550_ஈரோடு_கோபிச்செட்டிப்பாளையம்-நடுகல்-001.jpg